திருப்பதி கோயிலுக்கு இலவச தரிசனத்திற்காகச் செல்லும் பக்தர்கள் இனிமேல் ஒரே நாளில் இரண்டு முறை இலவச லட்டு பெற இயலாது. நவீனத் தொழில்நுட்பம் மூலம் தேவஸ்தானம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை அவர்களுடைய முகத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி தொழில்நுட்பத்தைத் தேவஸ்தானம் கடந்த ஒன்றாம் தேதி திருப்பதி மலையில் பரிசோதனை அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டுவந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் வெப் கேமராக்களில் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜி அடிப்படையில் பக்தர்களைக் கண்டறியும் முறை செயல்படுகின்றன. இதனால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளை ஒதுக்கீடாக பெரும் பக்தரே அந்த அறையை காலி செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து வேறு யாராவது அறையை காலி செய்தால் டெபாசிட் பணம் திரும்பக் கிடைக்காது.
தேவஸ்தானத்தின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் இடைத்தரகர்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக ஆன்லைன் மூலம் தங்கும் அறைகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கும் இந்த நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச லட்டு வழங்குவதில் புதிய மாற்றம்:
திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபம் வழியாக இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டுக்கு உரிய டோக்கன் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச லட்டு டோக்கன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கக் கவுண்டர்களில் பேஸ் ரெககனைஷேசன் டெக்னாலஜியுடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
Also Read : வந்தே பாரத் ரயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்! - மத்திய அமைச்சர் பாராட்டு..!
இதனால் ஒரே பக்தர் ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை டோக்கனை பெற இயலாது. மேலும் ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட டோக்கன்களை அங்கு பணியில் இருப்பவர்கள் வழங்கவும் இயலாது. பக்தர் ஒருவர் தன்னுடைய ஆதார் அட்டை சமர்ப்பித்து ஒரு முறை தங்குவதற்குத் தேவையான அறையைப் பெற்றுவிட்டால் அதன்பின் 30 நாட்கள் சென்ற பின் மட்டுமே அறையைப் பெற முடியும் என்று நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati, Tirupati laddu