தேர்தல் ஆணையம் புகார்! ஃபேஸ்புக், ட்விட்டரில் 500-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கம்

சமூக வலைதளங்கள், கடந்த மாதம் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கச் சொன்னால் மூன்று மணி நேரத்திற்குள் நீக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

news18
Updated: April 12, 2019, 10:37 PM IST
தேர்தல் ஆணையம் புகார்! ஃபேஸ்புக், ட்விட்டரில் 500-க்கும் மேற்பட்ட பதிவுகள் நீக்கம்
சமூக வலைதளம்
news18
Updated: April 12, 2019, 10:37 PM IST
நாடளுமன்றத் தேர்தலையொட்டி வன்முறையைத் தூண்டுவிதமாகவும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் இருக்கக் கூடிய பதிவுகளை நீக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதனை ஏற்று சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதள நிறுவனங்கள் 503 பதிவுகளை நீக்கியுள்ளது.

பேஸ்புக்கில் 500 பதிவுகளும் ட்விட்டரில் இரண்டு பதிவுகள், வாட்ஸ் அப்பில் ஒரு பதிவு என மொத்தம் 503 பதிவுகளை நீக்க தேர்தல் குழு குறிப்பிட்டிருந்தது. அதன்படி அவற்றை நீக்கியுள்ளோம் என தேர்தல் ஆணையத்தின் பொது இயக்குநர் திரேந்திர ஒஜா ( Dhirendra Ojha) கூறியுள்ளார்.

மேலும் எட்டு புகார்கள் ஃபேஸ்புக்கிலும் 39 புகார்கள் ட்விட்டரிலும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள், கடந்த மாதம் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் விதிமுறைகளுக்கு எதிரான பதிவுகள், புகைப்படங்கள், வீடியோக்களை நீக்கச் சொன்னால் மூன்று மணி நேரத்திற்குள் நீக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதேபோல் சமூக வலைதள நிறுவனங்கள், இது போன்ற ஒப்பந்தங்கள் , மிகப்பெரும் அரசியல் விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்களை ஏற்று நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...