அரசியல் தொடர்பாக கருத்து பதிவிட்ட நபரின் வீட்டுக்கு வந்து அதிரடி காட்டிய பேஸ்புக் டீம்!

மக்களின் தனிப்பட்ட உரிமைக்குள் தலையிடும் நிகழ்வாக இதனை பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பவான் தக்கால் கருத்து தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 7, 2019, 3:14 PM IST
அரசியல் தொடர்பாக கருத்து பதிவிட்ட நபரின் வீட்டுக்கு வந்து அதிரடி காட்டிய பேஸ்புக் டீம்!
File photo. (Reuters)
news18
Updated: April 7, 2019, 3:14 PM IST
அரசியல் தொடர்பாக கருத்து பதிவிட்ட நபரின் வீட்டுக்கு பேஸ்புக் நிர்வாகத்தில் இருந்து அலுவலர்கள் வந்து விசாரணை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் தேர்தல், அரசியல் கட்சிகள் தொடர்பான கருத்துக்கள், வதந்திகள் தீவிரமாக பரவி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் மூலமாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ள அரசியல் கட்சிகள், தங்களது பெருமையை பரப்பியும் விளம்பரம் செய்கின்றனர்.

இதனால், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இருக்கிறது. ஏற்கனவே, அமெரிக்காவில் தேர்தலில் பேஸ்புக் தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அந்நிறுவனம் மீது விமர்சனங்கள் ஏற்பட்டது.

வரும் தேர்தலிலும் அதுபோன்ற புகார்கள் எழுந்துவிடக் கூடாது என்பதால் பேஸ்புக் நிர்வாகமும், போலிச் செய்திகளை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் அரசியல் தொடர்பாக பதிவிட்ட ஒருவரை பேஸ்புக் நிர்வாகத்தின் குழுவினர் வீட்டுக்கே வந்து விசாரித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், அரசியல் தொடர்பான பதிவு அந்நபரால் பதிவிடப்பட்டதா என்று கூறி, பேஸ்புக் நிர்வாக அதிகாரிகள் அந்நபரின் வீட்டுக்குச் சென்று ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக போலீசார் வருவது போல, வீட்டுக்குள் வந்த பேஸ்புக் அதிகாரிகள் அந்த பதிவை எழுதியது நீங்கள்தானா? என்று கேள்விகளால் குடைந்தனர். மேலும், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை கேட்டனர்” என்று விசாரணைக்குள்ளான நபர் கூறியுள்ளார்.
Loading...
மக்களின் தனிப்பட்ட உரிமைக்குள் தலையிடும் நிகழ்வாக இதனை பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பவான் தக்கால் கருத்து தெரிவித்துள்ளார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...