ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய ஃபேஸ்புக் நிறுவனம்

ராகுல் காந்தி

இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு தொடர்பாக அவருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 • Share this:
  டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, சிறுமியின் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

  போக்ஸோ சட்டப்படி, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதோ, பத்ரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றமாகும். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.
  ட்விட்டர் மூலம், மத்திய அரசின் செயல்பாடுகளை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த நிலையில் அவருடைய ட்விட்டர் கணக்கை முடக்கியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  ராகுல் காந்தி மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் படத்தை பகிர்ந்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தநிலையில், இந்தச் சூழலில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய , தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் வலியுறுத்தி இருந்தது.

  அதற்கு ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவன இ்ந்திய அதிகாரிகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.

  அந்த சம்மனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ ராகுல் காந்தி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறுமியின் பெற்றோர் அடையாளத்தை வெளியிடும் வீடியோவை உடனடியாக நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” எனத் தெரிவித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ராகுல் காந்திக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அளித்த நோட்டீஸில், ‘ தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூற்றின்படி, கடந்த 10-ம் தேதி தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சிறார் பாதுகாப்புச்சட்டம் பிரிவு 74 மற்றும் போக்ஸோ சட்டம் 23ன்பிரிவு, ஐபிசி 288ஏ ஆகியவற்றை மீறி டெல்லி சிறுமியின் பெற்றோர் அடையாளத்தை வெளியிடும் வீடியோவை பதிவிட்டுள்ளீர்கள். அந்த பதிவை நீக்குமாறு என்சிபிசிஆர் உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
  Published by:Karthick S
  First published: