ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஃபேஸ்புக் பகுப்பாய்வில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்தியின் பக்கத்தில் ஈடுபாடு (Engagements) 40% அதிகரிப்பு.. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்..

ஃபேஸ்புக் பகுப்பாய்வில் பிரதமர் மோடியை விட ராகுல்காந்தியின் பக்கத்தில் ஈடுபாடு (Engagements) 40% அதிகரிப்பு.. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தகவல்..

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பஞ்சாப் மாநிலம், மோகாவில் உள்ள பத்னி கலான் பகுதியில் மிகப் பிரமாண்டமான டிராக்டர் பேரணியை நேற்று முன்தினம் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

முன்னாள் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேஸ்புக் பக்கத்தில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரையிலான காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விட 40 சதவீதம் அதிக ஈடுபாடு காணப்பட்டதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரசின் இந்த கூற்று பேஸ்புக் பகுப்பாய்வுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது பயனர்கள் ஐந்து பேஸ்புக் பக்கங்கள் வரை ஈடுபாட்டைக் கண்காணிக்க உதவுகிறது.

மேலும், பேஸ்புக் பகுப்பாய்வு தரவுகளின்படி, ராகுல் காந்தியின் சமூக ஊடக இடுகைகள் இந்த காலகட்டத்தில் விருப்பு, கருத்துகள் மற்றும் பங்குகள் உட்பட 13.9 மில்லியன் ஈடுபாடுகளைக் கண்டன. இதற்கு எதிராக, கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் ஈடுபாடுகள் 8.2 மில்லியன் மட்டுமே இருந்தது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சமூக ஊடகங்களைப் மிகவும் அதிகமான மக்கள் பின்தொடரும் முதல் ஐந்து உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர், இவரது பக்கத்தை 45.9 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர்.

அதுவே, பேஸ்புக்கில் ராகுல் காந்தியின் பக்கத்தை 3.5 மில்லியன் மக்கள் மட்டுமே பின்தொடர்கின்றனர். செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரையிலான காலகட்டத்தில், 16 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம், சுமார் 2.3 மில்லியன் மக்களிடமிருந்து பதில்களைப் பெற்றது. அதேசமயம், 5.6 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் பக்கம் 3.6 மில்லியன் மக்களிடமிருந்து பதில்களைப் பெற்றுள்ளது. இதற்கிடையில், ராகுல் காந்தியைப் பின்தொடர்பவர்கள் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளனர். இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் 52 சமூக ஊடக இடுகைகளைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுபோன்ற புள்ளி விவரங்களை பற்றி பேசிய காங்கிரஸ் தொண்டர் ஒருவர், ராகுல் காந்திக்கு நரேந்திர மோடியை விட மிகக் குறைவான பின்தொடர்பவர்கள் இருந்தாலும், ராகுல் காந்தியின் ஊடக இடுகைகளின் ஈடுபாட்டு நிலைகள் மிக அதிகம். அதில், லைக்ஸ், கமெண்ட்ஸ், மற்றும் ஷேர்ஸ் போன்றவை அடங்கும். இது, பார்வையாளர்கள் ராகுல் காந்தியின் உள்ளடக்கத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கான முக்கிய இண்டிகேட்டராக உள்ளது என்று கூறினார்.

தேசிய அளவில் அதிக பலம் கொண்ட பெரும் கட்சிகளாக பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகும். இரு கட்சிகளும் ஆட்சியை பிடிப்பதிலும், ஆட்சியை தக்க வைத்து கொள்வதிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read... ட்விட்டரில் 6 மில்லியன் ரசிகர்களை கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. மகிழ்ச்சியில் வீரர்கள்..

இந்த நிலையில், இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றிய ஆளும் கட்சியான பாஜக-வை எதிர்த்து குரல்கள் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் எழுப்பி வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் இவரது போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தேசிய மக்களின் கவனத்திற்கு திரும்பியுள்ளது. அதில் ஒன்று தான் 'ஹத்ராஸ் கூட்டு பாலியல்' வழக்கு. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஒரு மாதத்திற்கு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை சென்றனர். இது தான் நாடு முழுவதும் உள்ளோரின் கவனத்தை ராகுல் காந்தி பக்கம் திருப்பியது என்றும் சொல்லலாம். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வேணுகோபால் உள்பட ஐந்து பேர் ஹத்ராஸ் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அடுத்ததாக, மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் 3 நாட்கள், ”மெகா டிராக்டர் பேரணி” நடத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலம், மோகாவில் உள்ள பத்னி கலான் பகுதியில் மிகப் பிரமாண்டமான டிராக்டர் பேரணியை நேற்று முன்தினம் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

மேலும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது. இந்த இரண்டு முக்கிய காரணங்கள் தான் ராகுல் காந்திக்கு தனது சமூக ஊடகத்தில் ஈடுபாடுகள் அதிகரித்ததாக கட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Facebook, PM Modi, Rahul gandhi