போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும் செய்திகளின் தரத்தை உயர்த்தவும் இளம் தலைமுறை டிஜிட்டல் பத்திரிகையாளர்களுக்குப் பணி வாய்ப்பளிக்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது.
போலி செய்திகளைக் கட்டுப்படுத்த பத்திரிகையாளர்களைப் பணியமர்த்தும் முடிவில் இருக்கிறதாம் ஃபேஸ்புக்.
போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும் செய்திகளின் தரத்தை உயர்த்தவும் இளம் தலைமுறை டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களைப் பணியமர்த்த ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரும் வெளியீட்டாளரான ஆக்ஸல் ஸ்பிரிங்கர் நிறுவனத்தின் சிஇஓ மதாய்ஸ் டோப்னெர் உடன் ஃபேஸ்புக் சிஇஒ மார்க் ஷூக்கர்பெர்க் தரமான செய்திகளைப் பயனாளர்களுக்கு வழங்குவது குறித்தான ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மார்க் சக்கர்பெர்க் கூறுகையில், “ஃபேஸ்புக்கில் போலி கணக்குகள் அதிகம் உலவுகின்றன. சிலர் 700 மில்லியன் போலி கணக்குகள் இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். எனக்குத் தெரியவில்லை. ஆனால், இதை மிகப்பெரிய பிரச்னையாகக் கருதுகிறேன். புலனாய்வு ஊடகவியலாளர்கள், நிரூபர்கள் மற்றும் மிகப்பெரும் ஊடக நிறுவனங்களுக்கு நாம் மிகப்பெரும் பொருளாதார ஊதியம் வழங்கவேண்டும். அதற்காக இதை வணிக நோக்கோடு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.
செய்தியாளர்கள், ப்ளாகர்கள், டிஜிட்டல் வெளியிட்டாளர்கள், பாரம்பரிய பதிப்பாளர்கள் என ஆயிரக்கணக்கானோரை ஈர்க்கும் வகையில் ஃபேஸ்புக் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என மார்க் சக்கர்பெர்க் விளக்கினார்.
மேலும் பார்க்க: EXCLUSIVE பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் என்ன தவறு? - எடப்பாடி பழனிசாமி
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.