மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 40,000 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தாக்கரே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை மரைன் ட்ரைவ் பகுதியில் மாஸ் அணியாத பொதுமக்களுக்கு காவல்துறையினர் அளித்த தண்டனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மரைன் ட்ரைவ் பகுதியில் மாஸ்க் அணியாமல் வந்த நபர்களை சாலையில் ‘முர்கா நடை’ நடக்க வைத்துள்ளனர். அதாவது இரண்டு கைகளையும் முழங்காலுக்கு கீழ் கட்டிக்கொண்டு தாவிதாவி செல்ல வேண்டும். இதுபோன்ற தண்டனை வழங்க யார் அனுமதி அளித்தது என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
Violators made to do ‘Murga Walk’ by mumbai police at Marine Drive promenade for not wearing masks.😃
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மும்பை போலீஸார், “ கொரோனா விதிமீறல்களுக்கு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக சீனியர் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்களுக்கு தண்டனை வழங்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.