சமீப காலமாக மக்களிடம் டேட்டிங் ஆப் பயன்பாடு என்பது அதிகரித்து வருகிறது. ஒரே மாதிரியான விருப்பங்கள் மற்றும் எண்ணங்களை கொண்டவர்கள் சந்திக்கும் ஒரு தளமாக இந்த டேட்டிங் ஆப்கள் மாறி வருகின்றன. Tinder, Bumble மற்றும் Hinge போன்ற செயலிகள் கொடிகட்டி பறந்து வருகின்றன.
திருமணமாகாத இளைஞர்கள் இந்த டேட்டிங் செயலிகளை பயன்படுத்துவது போலவே, திருமணத்தை மீறிய உறவை ஏற்படுத்திக்கொள்ள செயலி இருக்கிறது என்று சொன்னால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அது போன்ற ஒரு செயலியில் 20% பயனர்கள் இந்தியர்களாக இருக்கின்றன என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
க்லீடன்( Gleeden ), என்ற திருமணத்திற்குப் புறம்பான பிரெஞ்சு டேட்டிங் செயலி, உலகம் முழுவதும் 10 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. தரவுகளின்படி, மொத்தம் உள்ள 10 மில்லியன் பயனர்களின், 2 மில்லியன் பயனர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துள்ளது.
தங்களின் பயனர்கள் குறித்து Gleeden இன் இந்தியாவின் மேனேஜர் சிபில் ஷிடெல்," இந்தியா ஒரு தார திருமண வழக்கத்தை கொண்டிருக்கும் நாடு. அதனால் திருமணத்திற்கு பிறகான உறவுகளை நாடு விரும்புவதில்லை. ஆனால் எங்கள் செயலி பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் தெடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
2021 டிசம்பரில் எங்களது பயனர்கள் எண்ணிக்கை 1.7 மில்லியனாக இருந்தது. 2022 மட்டும் எங்களுக்கு 18 சதவீதத்திற்கும் அதிகமான புதிய பயனர்களை கொண்டு வந்துள்ளது. தற்போது எங்களது செயலியின் இந்திய பயனர்கள் மட்டும் 2+ மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ள 2 மில்லியன் பயனர்களில், 66 சதவீதம் பேர் பெருநகரங்களில் இருந்தும் , 34 சதவீதம் பேர் சிறு நகரங்களிலிருந்தும் பயன்படுத்துகின்றனர்.
இதன் மூலம் இந்தியாவில் சமூக நிலைப்பாடு மாறிவருவதை தெரிந்துகொள்ள முடிகிறது என்றார். மேலும் அவர், பயனர்கள் பெரும்பாலும் பொறியாளர்கள், தொழில்முனைவோர், ஆலோசகர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள் போன்ற உயர் வர்க்க பின்னணி கொண்டவர்கள் என்றும் கூறினார்.
அதுபோக குறிப்பிட்ட எண்ணிக்கையில் இல்லத்தரசிகள் இருப்பதாக கூறியுள்ளனர். பயன்பாட்டில் உள்ள பெண்கள் பெரும்பாலும் 26 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இந்த செயலி பயன்படுத்தும் ஆண்கள் பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dating apps, Technology