முகப்பு /செய்தி /இந்தியா / சர்ச்சையை ஏற்படுத்திய புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை: மத்திய அமைச்சர் விளக்கம்!

சர்ச்சையை ஏற்படுத்திய புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை: மத்திய அமைச்சர் விளக்கம்!

ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வெறும் வரைவு அறிக்கைதான்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசின் வரைவு அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இதுதொடர்பாக மத்திய வெளியவுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவில், ‘மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வெறும் வரைவு அறிக்கைதான்.

சம்மந்தப்பட்ட பொதுமக்களிடமிருந்து கருத்துகள் பெறப்படும். மாநில அரசுகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். அதன்பிறகே, இந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்படும். இந்திய அரசு அனைத்து மொழிகளையும் மதிக்கிறது. எந்த மொழியும் திணிக்கப்படாது’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published:

Tags: External Minister jaishankar, Hindi, Imposing Hindi