முகப்பு /செய்தி /இந்தியா / அமித்ஷா இடத்தில் போட்டியிட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்

அமித்ஷா இடத்தில் போட்டியிட வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனுத்தாக்கல்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனுத்தாக்கல்

  • 1-MIN READ
  • Last Updated :

குஜராத் மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் குஜராத் மாநிலத்தில் அந்த 2 இடங்களுக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இதனிடையே மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல் மற்றொரு இடத்துக்கு மெஹ்சேனா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஜுலை 5 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Watch Also:

First published:

Tags: BJP, External Minister jaishankar