Home /News /national /

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் - அமெரிக்க எம்.பிக்கள் விமர்சனத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் - அமெரிக்க எம்.பிக்கள் விமர்சனத்துக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இந்திய சிறுபான்மையினர்கள் குறித்த அமெரிக்க எம்.பிக்கள் விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்தியாவில் மதச் சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க எம்.பி விமர்சனம் செய்ததற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

    இந்திய - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் சார்பில் நடைபெற்ற காணொலி வழி குழு விவாதக் கூட்டத்தில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார். அவர் பேசும் போது, “நாட்டில் அதிகரித்து வரும் ‘இந்து தேசியவாதம்’ என்ற போக்கு கவலை அளிக்கிறது. குடிமக்களை வேறுபடுத்தி பார்ப்பது, சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்தி நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது’’ என்றார்.

    Also read: இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா - இன்று ஒரே நாளில் 2.35 லட்சம் பேர் பாதிப்பு

    இதே நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்.பி., எட் மார்க்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு தென்படுவதாகவும், இது பாகுபாடுகளை வளர்த்து வன்முறைகளுக்கு வித்திடும் எனவும் கூறியிருந்தார். இதே நிகழ்ச்சியில் பேசிய மேலும் 3 அமெரிக்க எம்பிக்கள் இந்திய அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘இந்தியா துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு என்றும் அதற்கு வேறு யாரும் சான்றிதழ் தரவேண்டியதில்லை. சிலர் அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூண்டுதல் காரணமாகவும் இந்திய ஜனநாயகம் குறித்து விமர்சித்து வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: America, India

    அடுத்த செய்தி