Explainer: 'ஒரு நாடு ஒரே தேர்தல்' என்றால் என்ன...? அதனை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன...?

எதிர்பாராத வகையில், ஒரு மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சி கலைக்கப்பட்டால், அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும் வரையில், ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டியிருக்கும் என்று ஒரு நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

Explainer: 'ஒரு நாடு ஒரே தேர்தல்' என்றால் என்ன...? அதனை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன...?
நாடாளுமன்றம்
  • News18
  • Last Updated: June 21, 2019, 11:08 AM IST
  • Share this:
ஒரு நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? அதனால் என்ன பயன்? அதனை எதிர்ப்பதற்கான காரணங்கள் என்ன?  என்பதை பற்றி பார்க்கலாம்.

நாட்டில் உள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதன் அர்த்தம். இந்தியாவில் 1967-ம் ஆண்டு வரை இது நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அதன் பிறகு சில மாநிலங்களில் முன்கூட்டியே ஆட்சி கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை முடிவுக்கு வந்தது.

தற்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில சட்டப்பேரவையின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடைந்த பிறகோ அல்லது சில காரணங்களினால் ஆட்சி கலைக்கப்பட்டாலோ தேர்தல் நடத்தப்படுகிறது. இது நாடாளுமன்றத்திற்கும் பொருந்தும். இதை மாற்றியமைத்து அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


மாநில சட்டப்பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவு மிகப்பெரிய அளவில் குறையும் என்று கூறப்படுகிறது. ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றால், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த ஒரு மாநில தேர்தலிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால், மக்கள் பிரச்சனையில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது, வாக்காளர்களை ஊக்குவிக்கும் என்றும் இதன் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் சட்ட கமிஷன் தெரிவிக்கின்றது.

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பிரச்சனைகள் மாறுபடுகின்றன. வாக்காளர்களிடம், பிரச்சனைகளின் அடிப்படையில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுப்பதில் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது, குழப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.என்ன நடந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தேர்தல் நடைபெறாது என்பது, ஆள்பவர்களுக்கு மக்கள் மீதுள்ள பயத்தை குறைத்து விடும். எதிர்பாராத வகையில், ஒரு மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சி கலைக்கப்பட்டால், அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும் வரையில், ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்த வேண்டியிருக்கும். இது ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என்று ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக பெரும்பான்மை பலம் இல்லாமல் மத்தியில் ஒரு கூட்டணி ஆட்சி அமைகிறது என்று வைத்துக்கொண்டால், சில ஆண்டுகளில் கூட்டணி உடைந்து ஆட்சி கலைந்தால், உடனே நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தும் சூழல் உருவாகும்.

Also see... VIRAL VIDEO | மாற்றுத்திறனாளி நண்பனுக்கு உணவு ஊட்டும் நண்பன்: மனதை நெகிழ வைக்கும் காட்சி





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading