முகப்பு /செய்தி /இந்தியா / ஆண்களுக்கான உரிமை இயக்கம் குறித்து உங்களுக்கு தெரியுமா..?

ஆண்களுக்கான உரிமை இயக்கம் குறித்து உங்களுக்கு தெரியுமா..?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நாடாளுமன்றத்தில் ராஜீவ் பிரதாப் ரூடி, ஹரிநாராயணன் ராஜ்பார் போன்ற எம்பி-க்கள் மூலமாக ஆடவர் பாதுகாப்பு ஆணையம் அமைக்க குரல் கொடுத்தனர்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் பாதுகாப்பு சங்கம், பெண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் என வெவ்வேறு பெயர்களில் ஆங்காங்கே மகளிர் சங்கங்கள் இயங்கி வருவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஆண்களுக்கான உரிமை பாதுகாப்பு இயக்கம் இயங்கி வருவதை எங்காவது பார்த்துள்ளீர்களா?

ஒரு அங்கீகரிக்கப்பட்ட பெயரில் இல்லை என்றாலும் கூட கடந்த 1990-களில் ஆடவர் பாதுகாப்பு இயக்கம் எனும் அமைப்பு பெயரளவில் இயங்கி வந்தது. முதலாவது ஆடவர் உரிமை பாதுகாப்பு இயக்கங்கள் கொல்கத்தா, மும்பை, லக்னோ போன்ற நகரங்களில் இயங்கியது. பெரும்பாலும் கணவர் உரிமைகளை மையப்படுத்தியே இந்த இயக்கங்கள் செயல்பட்டு வந்தன.

மகளிர் பாதுகாப்பு சட்டங்களை தவறாகப் பயன்படுத்த எதிர்ப்பு.. : மகளிர் பாதுகாப்புக்கு என்று நாட்டில் பல சட்டங்கள் அமலில் இருக்கின்றன. பாதிக்கப்படும் பெண்களுக்கு இவை தான் பாதுகாப்பு அரண் ஆகும். ஆனால், இந்த சட்டங்களை கேடயமாக பயன்படுத்தி கணவர்களை அல்லது அவரது குடும்பத்தினரை சில பெண்கள் பழி வாங்குவதாக ஆடவர் பாதுகாப்பு இயக்கங்கள் குற்றம்சாட்டின.

Read More : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு..? வைரலான ட்வீட்.. கமிட்டி துணைத்தலைவர் மறுப்பு

இந்திய தண்டனையியல் சட்டப் பிரிவுகள் 498ஏ, 375, 376 மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 போன்றவற்றை சிலர் ஆண்களை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்துகின்றனர் என்று ஆடவர் பாதுகாப்பு இயக்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் பதியப்படும் பெரும்பாலான வழக்குகள் போலியானவை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இணையத்திலும் செயல்பாடு : ‘இந்திய குடும்பங்களை பாதுகாப்போம்’ (எஸ்.ஐ.எஃப்.) என்ற பெயரில் கடந்த 2005ஆம் ஆண்டு யாஹு தளத்தில் குழு ஒன்று செயல்பட்டு வந்தது. அதில், 10,000 உறுப்பினர்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த குழுவானது, பின்னாளில் நிறைய உறுப்பினர்களின் பங்களிப்புடன் அங்கீகரிக்கப்பட்ட இயக்கமாக மாறியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மற்றும் துயரத்தில் உள்ள ஆண்களுக்காக இவர்கள் உதவி மையங்களை தொடங்கினர். எஸ்.ஐ.எஃப் வழிகாட்டுதலில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உருவாகியதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் அவை கிளைகளை பரப்பின. வாராந்திர கூட்டங்களை நடத்தி, ஆண் பாதுகாப்பு தொடர்பான சட்டப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அத்தகைய தன்னார்வ இயக்கங்களில் ஒன்றுதான் Men Welfare Trust என்னும் ஆடவர் நல அறக்கட்டளை ஆகும். இந்த இயக்கம் கடந்த 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு விரிவான செயல்பாடுகளை முன்னெடுத்தது.

நாடாளுமன்றத்தில் ராஜீவ் பிரதாப் ரூடி, ஹரிநாராயணன் ராஜ்பார் போன்ற எம்பி-க்கள் மூலமாக ஆடவர் பாதுகாப்பு ஆணையம் அமைக்க குரல் கொடுத்தனர். மகளிர் பாதுகாப்பு சட்டங்களால் பழிவாங்கப்பட்டு, அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஆண்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் இருந்து பெற்று ஆடவர் நல அறக்கட்டளை வெளியிட்டது.

சமூக வலைதளங்களிலும் கூட இந்த அறக்கட்டளை இயங்கி வருகிறது. திருமண வாழ்க்கையில் பெண்ணின் சம்மதமின்றி உடலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமையாக கருதப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்த அறக்கட்டளை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

First published:

Tags: Men, Tamil Nadu