• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை, நிலச்சரிவுக்கு காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை, நிலச்சரிவுக்கு காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

கேராளாவில் கன மழை, நிலச்சரிவு

கேராளாவில் கன மழை, நிலச்சரிவு

கனமழையால் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கான காரணம் குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. திருவனந்தபுரம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் ஆறுகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பத்தனம்திட்டா பகுதியில் அமைந்துள்ள பம்பா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல, எர்ணாகுளத்தில் உள்ள முவட்டுப்புழா ஆற்றிலும் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

    கோட்டயம் மாவட்டத்தில் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கூட்டிக்கல்லில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப்படையினரும், முப்படைகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். மிக் 17 மற்றும் சாரங் ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலமாக உதவிப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    இடுக்கி மாவட்டத்தின் கோக்கயார் பகுதியிலும் தேசிய பேரிடர் வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநிலம் முழுவதும் 105 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மடுமோன், கல்லுப்பாறா, அருவிபுரம், வெள்ளைக்கடவு அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் பினராயி கூறினார்.

    இதனிடையே, கேரள வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், கேரள மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தநிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்தின் பிரதான அணைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல அணைகளில் அபாய அளவை தாண்டி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலம்புழா, மலங்கரா, நெய்யாறு, அருவிக்கரா, வாளையாறு, போதுண்டி, புள்ளியாய், பரம்பிக்குளம், காஞ்சிரபுழா உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரங்களில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதைப்போல வயல்வெளிகள், விவசாய நிலங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.

    கேரள மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டில் ஏற்பட்ட மழை-வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள தற்போதைய மழை, சேதங்களும் மக்களின் வாழ்வாதாரத்தையும், இயல்பு வாழ்க்கையையும் முடக்கி போட்டுள்ளது. இதற்கிடையே கனமழையால் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே ஏற்பட்டு வரும் நிலச்சரிவும் மக்களின் உயிர்களை பறித்து வருகின்றன. அந்தவகையில் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா போன்ற மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன.

    இதில் கோட்டயம் மாவட்டம், முண்டகாயம் அருகே உள்ள குட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் அங்கிருந்த பல வீடுகள் சேதமடைந்தன. அவற்றில் வசித்து வந்த பலரும் உயிரோடு மண்ணில் புதைந்தனர். இதில் நேற்று காலை வரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைப்போல இடுக்கி மாவட்டத்தின் கொக்கையார் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவிலும் சில வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் வசித்து வந்த மக்களும் உயிருடன் புதைந்தனர். இதில் 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

    கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. அதன்பேரில் முப்படையினரும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காககளமிறங்கி உள்ளனர். ராணுவத்திற்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் கோவையில் இருந்து திருவனந்தபுரம் விரைந்துள்ளன. இதைப்போல ஐ.என்.எஸ். கருடா கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று நிவாரண பொருட்களுடன் பாதிக்கப்பட்ட பகுதியில் களமிறக்கப்பட்டு இருக்கிறது.

    விமானப்படையை சேர்ந்த 2 எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்கள் திருவனந்தபுரம் சங்குமுகம் விமானப்படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பத்தனம்திட்டா மாவட்டத்தின் மல்லப்பள்ளியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் வெள்ள பாதிப்பு அதிகம் நிறைந்த பகுதிகளில் ராணுவ வீரர்களுடன், விமானப்படையினரும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விமானப்படையின் தெற்கு பிராந்திய தளங்கள் அனைத்தும் மீட்பு பணிகளுக்காக உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    Must Read : கேரளாவில் கரைபுரண்டோடும் ஆற்று வெள்ளத்தில் சரிந்துவிழும் முழு வீடு- பதறவைக்கும் வீடியோ

    இந்நிலையில், திடீரென கொட்டித் தீர்த்துள்ள கனமழைக்கு, மேக வெடிப்பே காரணம் என்று கொச்சி அறிவியல் தொழில் நுட்ப பேராசிரியர் அபிலாஸ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த மேக வெடிப்பு, சில நேரங்களில் இடி, மின்னலுடனோ அல்லது, ஆலங்கட்டி மழையாகவோ கொட்டித் தீர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: