Corona Vaccine | கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான காலவரம்பை அதிகரிக்க பரிசீலனை - காரணம் என்ன?

கோவிஷீல்ட் தடுப்பூசி

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடையிலான பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆறு வாரங்களில் இருந்து எட்டு வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

  • Share this:
இந்தியாவில் தற்போது புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரிப்பான கோவிஷீல்ட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரிப்பான கோவேக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இவை குறிப்பிட்ட கால அளவில் இரண்டு டோஸ்கள் போடப்படுகின்றன.

இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இடண்டாம் டோஸ்களுக்கு இடையிலான கால அளவை அதிகரிக்க மத்திய அரசின் வல்லுநர் குழு பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரம் நியூஸ்18- இடம் பேசிய போது, “கோவிஷீல்ட் தடுப்பூசியின்  முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான கால அளவை அதிகரிக்கும் போது, தடுப்பூசியின் செயல்திறன் மேம்படுத்தப்படும் என்று பரிந்துரைக்கும் சர்வதேச ஆய்வுகளின் புதிய ஆதாரங்களை வல்லுநர் குழு மதிப்பாய்வு செய்து வருகிறது. இது தொடர்பாக அடுத்த வாரத்தில் வல்லுநர் குழு முக்கிய முடிவை எடுக்கும்” என தெரிவித்தனர்.

ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ரா ஜெனிகா தயாரிப்பான கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடையிலான பரிந்துரைக்கப்பட்ட காலவரம்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆறு வாரங்களில் இருந்து எட்டு வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்பட்டன. முதலில் முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும், பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு விரிவுபடுத்தியது. மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தடுப்பூசி போட தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் 18 வயதிற்கும் மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை பல மாநில அரசுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

இது போன்ற நிலையில் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடையிலான கால வரம்பை அதிகரிப்பது தடுப்பூசி பற்றாக்குறை என்ற நெருக்கடி நிலையை ஓரளவுக்கு தளர்த்தும் என நம்பப்படுகிறது.

பாஜகவுக்கு வாக்களித்ததற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள்: அசாமில் அகதிகளாக தஞ்சம் புகுந்த மேற்குவங்கத்தினர்!


கடந்த மார்ச் மாதத்தில் Lancet journal-ல் வெளியான ஆய்வு முடிவுகளில், கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான கால வரம்பை 12 வாரங்களாக உயர்த்தினால் தடுப்பூசியின் செயல்திறன் 81.3% ஆக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது. இதுவே 6 வாரங்களுக்கு குறைவான காலவரம்பில் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டால் கோவிஷீல்ட் தடுப்பூசியின் செயல்திறன் 55.1% ஆக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறினர்.

மே 6ம் தேதி வரை இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16.25 கோடியாக அதிகரித்தது. இதில் 18-44 வயதுடைய 9 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: