Home /News /national /

Budget 2022: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2022: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் - எதிர்பார்ப்புகள் என்ன?

Budget 2022

Budget 2022

Union Budget 2022: இந்த ஆண்டு பட்ஜெட்டை ஒப்பிடுகையில், சுமார் 14 சதவிகிதம் அதிகரித்து 39. 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதில், வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

     

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்காவது முறையாக  மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.  பணவீக்கப் பிரச்னை, கொரோனா மூன்றாவது அலை என பல்வேறு சவால்களுக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    மத்திய பட்ஜெட்: எதிர்பார்ப்பு என்ன?

    மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இரண்டரை லட்சம் ரூபாயாக கடந்த 2017 -18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மாற்றியமைத்தார். தற்போது வரை அதே அளவில் தொடரும் உச்ச வரம்பை 5 லட்சமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

    Also read:  தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

    இதேபோல், தொழில் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். MNREGA எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என FICCI கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும்,  கொரோனா பெருந்தொற்றலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேவைத் துறையை மீட்க வேண்டும் என்றும் ஃபிக்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தோல் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற வேலை வாய்ப்பு மிகுந்த துறைகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் ஊக்கத் திட்டம் வழங்க வேண்டும் என சிஐஐ கோரியுள்ளது. .

    Also read:  மத்திய பட்ஜெட் 2022: உயருமா வருமான வரி விலக்கு உச்சவரம்பு? மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்ப்பு!!

    அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் மீதான மூலதன ஆதாய வரியை ரத்து செய்வது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. வரி ரத்து செய்யப்பட்டால் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு நிதியை ஈர்க்கலாம் என HSBC நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட்ஜெட்டின் மிகப்பெரிய பயனாளியாக உற்பத்தித் துறை இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். சேவை மற்றும் விவசாயத் துறைகளுக்கு பெரிய அறிவிப்புகள் இருக்கலாம் என்பதும் சில பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு.

    Also read:  பேஸ்புக் பதிவால் இளைஞர் கொலை - இஸ்லாமிய மதகுருக்கள் கைது!!

    இந்த ஆண்டு பட்ஜெட்டை ஒப்பிடுகையில், சுமார் 14 சதவிகிதம் அதிகரித்து 39. 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளதால் பட்ஜெட்டில் ஜனரஞ்சக அறிவிப்புகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Nirmala Sitharaman, Union Budget 2022

    அடுத்த செய்தி