ஓடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்!

ஹெல்மெட் இல்லையென்றால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Karthick S | news18
Updated: September 8, 2019, 9:28 PM IST
ஓடிசாவில் போக்குவரத்து விதியை மீறிய ஆளும் கட்சி எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம்!
மாதிரிப் படம்
Karthick S | news18
Updated: September 8, 2019, 9:28 PM IST
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் போக்குவரத்து விதிமுறையை மீறிய எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. இதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஹெல்மெட் இல்லையென்றால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, பல விதிமீறல்களுக்கு அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.  ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்கள்தான் இதுவரை அதிக அபராதம் விதித்துள்ளது. இதுவரை, ஒடிசாவில் 88 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதி ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வான அனந்த நாராயண் ஜேனா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த புவனேஷ்வர் காவல் துணை ஆணையர் அனுப் சஹோ, எம்.எல்.ஏ அனந்த நாராயணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான கட்டண ரசீதை வழங்கினார்.

Also see:

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...