Home /News /national /

அபிநந்தன் இருந்த படைப் பிரிவுக்கு விமானப் படையின் கவுரவ விருது!

அபிநந்தன் இருந்த படைப் பிரிவுக்கு விமானப் படையின் கவுரவ விருது!

அபிநந்தன்

அபிநந்தன்

பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்ற படைப்பிரிவுக்கு விமானப்படையின் கவுரவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்களின் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படைகள் இந்திய வான் எல்லைப் பகுதிதியில் நுழைந்தன.

அப்போது, பாகிஸ்தானின் போர் விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இந்நிலையில் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து எப் 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக, அபிநந்தன் இடம்பெற்றிருந்த 51-வது படைப்பிரிவுக்கு விமானப்படையின் யூனிட் சைட்டேசன் என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விமானப்படை தளபதி ஆர்கேஎஸ் பதுரியா தெரிவித்துள்ளார். இந்த விருதை 51-வது படைப்பிரிவு குழுவின் தலைவர் கேப்டன் சதீஷ் பவார் பெற்று கொள்வார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Abhinandan

அடுத்த செய்தி