முகப்பு /செய்தி /இந்தியா / கருத்துக்கணிப்பு முடிவுகள்.. திரிபுரா, நாகாலந்தில் மீண்டும் பாஜக ஆட்சி!

கருத்துக்கணிப்பு முடிவுகள்.. திரிபுரா, நாகாலந்தில் மீண்டும் பாஜக ஆட்சி!

பாஜக கொடி

பாஜக கொடி

மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருதப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Nagaland, India

திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என ’இந்தியா டுடே -ஆக்ஸிஸ் மை இந்தியா’ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றன.

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், திரிபுரா சட்டப்பேரவையில், பாஜக கூட்டணி 36 முதல் 45 இடங்கள் வெல்லும் எனவும் இடதுசாரிகள் கூட்டணி 6 முதல் 11 இடங்களும் டி.எம்.பி கட்சி 9 முதல் 16 இடங்கள் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்புகளின் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது.

மேகாலயா சட்டப்பேரவையில், தேசிய மக்கள் கட்சி 18-24 இடங்களும் காங்கிரஸ் கூட்டணி 6 - 12 இடங்களிலும் பாஜக கூட்டணி 4 - 8 இடங்கள், மற்றவை 4 - 8 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருதப்படுகிறது.

First published:

Tags: Meghalaya, Nagaland, Tripura