ஹோம் /நியூஸ் /இந்தியா /

Exit Polls : இமாச்சல பிரதேச தேர்தலில் இழுபறி? - பாஜக Vs காங்கிரஸ் : யாருக்கு எவ்வளவு இடங்கள்?

Exit Polls : இமாச்சல பிரதேச தேர்தலில் இழுபறி? - பாஜக Vs காங்கிரஸ் : யாருக்கு எவ்வளவு இடங்கள்?

மாதிரி படம்

மாதிரி படம்

மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில், ஆட்சியமைக்க 35 இடங்ளில் வெற்றி பெற வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Himachal Pradesh, India

குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் முடிவடைந்ததையடுத்து, குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவில் இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் இழுபறியில் முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவானது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. காங்கிரஸ் இம்முறை ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும், தற்போது பாஜக அரசு இமாச்சல பிரதேச மாநிலத்தை ஆண்டு வந்தாலும், இம்முறை மீண்டும் ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பிலும் தேர்தலை சந்தித்தன.

இதையும் படிக்க :  குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சியை கைப்பற்றும் பாஜக? - கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன? - முழு விபரம்!

மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில், ஆட்சியமைக்க 35 இடங்ளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனினும், காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுவதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவும் எனவும் கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னர் P-Marq நடத்திய கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 34 முதல் 39 இடங்களையும், காங்கிரஸ் கட்சிக்கு 28 முதல் 33 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி 24 முதல் 34 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 40 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜக காங்கிரஸ் இடையே இழுபறி நிலவ வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதாவிற்கு 34 முதல் 39 இடங்களையும், காங்கிரஸ் 28 முதல் 33 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Aam Aadmi Party, Assembly Election 2022, BJP, Congress, Election 2022, Himachal, Himachal Pradesh