ஹோம் /நியூஸ் /இந்தியா /

Exit Polls : குஜராத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நிலை என்ன? - வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!

Exit Polls : குஜராத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நிலை என்ன? - வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பாஜக என்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரம் செய்தாலும், 10 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத் மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகளில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சிகள் மிகவும் பின்னடவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் தற்போது வெளியிட்டு இருக்கின்றன. பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் குஜராத்தில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சி இந்த தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டது. இதில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 50க்கும் குறைவான இடங்களில் வெற்றிபெறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல இந்த தேர்தலில் 3 வது அணியாக களமிறங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அக்கட்சியும் மிகக்குறைவான இடங்களிலேயே வெற்றிபெறும் என இந்த கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

இதையும் படிக்க :  Exit Polls : குஜராத், ஹிமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

அதன்படி `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை தனியார்  தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அதன் விபரம் பின்வருமாறு:-

குஜராத் மாநிலத்தின் கருத்து கணிப்புகள்: 

TV 9 வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி, ஆளும் பாஜக 125 முதல் 130 இடங்களிலும், காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்களிலும், வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவை 3 முதல் 7 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி, ஆளும் பாஜக 128 முதல் 148 இடங்களிலும், காங்கிரஸ் 30 முதல் 42 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 முதல் 10 இடங்களிலும், வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவை 0 முதல் 3 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஜன் கி பாத் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி, ஆளும் பாஜக 117 முதல் 140 இடங்களிலும், காங்கிரஸ் 34 முதல் 51 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 6 முதல் 13 இடங்களிலும், வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவை 1 முதல் 2 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் முடிவுகள்

பி-மார்க் வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி, ஆளும் பாஜக 128 முதல் 148 இடங்களிலும், காங்கிரஸ் 30 முதல் 42 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 முதல் 10 இடங்களிலும், வெற்றி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. மற்றவை 0 முதல் 3 இடங்களில் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Election 2022, Gujarat, Gujarat Assembly Election