5 மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாநிலம் மேற்குவங்கம். 2 முறை ஆட்சியில் இருந்து வரும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இம்முறை புதிய போட்டியாளரை எதிர்கொள்கிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை மட்டுமே வென்ற பாஜக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகளில் 18-ல் வென்று திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த பலத்துடன் மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை அகற்றி அங்கு ஆட்சி அமைக்கும் வியூகத்துடன் கடுமையான களப்பணியை பாஜக செய்தது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்குமா அல்லது ஆச்சரியப்படுத்தும் வெற்றியை பாஜக பதிவு செய்யுமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மே 2ம் தேதி தான் விடை கிடைக்கும் என்றாலும், தற்போது மேற்குவங்கத்தில் 8ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததுள்ளதால் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் வெல்லப்போவது யார் என்பது குறித்த கணிப்பை தற்போது காணலாம்..
TIMES NOW-CVoter:
டைம்ஸ் நவ் - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே தெரியவந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் - 158
பாஜக - 115
காங்கிரஸ் + இடதுசாரிகள் + ISF - 76
மற்றவை - 4
Republic டிவி - CNX:
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் - 128 - 138
பாஜக - 138 - 148
காங்கிரஸ் + இடதுசாரிகள் + ISF - 11 - 21
ABP NEWS - C VOTER
ஏபிபி நியூஸ் - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது..
திரிணாமுல் காங்கிரஸ் - 152 - 172
பாஜக - 109 - 121
காங்கிரஸ் + இடதுசாரிகள் + ISF - 14 - 25
ஜான் கி பாத்:
ஜான் கி பாத் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் - 134 - 118
பாஜக - 150 - 162
காங்கிரஸ் + இடதுசாரிகள் + ISF - 10 - 14
Published by:Arun
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.