Home /News /national /

கோவாவில் தொங்கு சட்டமன்றம்- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

கோவாவில் தொங்கு சட்டமன்றம்- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

பா.ஜ.க, காங்கிரஸ்

பா.ஜ.க, காங்கிரஸ்

கோவா மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்கள் வந்துள்ளன.

    பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது.

    2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும் பிற எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இந்தமுறை பெரும்பான்மையை பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பா.ஜ.க உழைத்தது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸும் தீவிரமாக பணியாற்றியது. உத்தரப் பிரதேசத்துக்கான ஏழாம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளநிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க பெரும்பான்மையைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவாவில் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புதான் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான கணிப்புகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை வராது என்றே கணித்துள்ளது.

    ஜன் கி பாத் கருத்துக் கணிப்பின்படி, ‘பா.ஜ.கவுக்கு 13 - 19 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 14 - 19 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகளும் பிற கட்சிகள் 4 - 8 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    விஇடு கருத்துக் கணிப்பின்படி, ‘பா.ஜ.கவுக்கு 14 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகளும், பிற கட்சிகளுக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    கோவா: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் முந்தும் கட்சி எது?

    சி.என்.எக்ஸ் கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க 16 - 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 - 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 -7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Election 2022, Goa

    அடுத்த செய்தி