Home /News /national /

உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க - கருத்துக் கணிப்பில் தகவல்

உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் பா.ஜ.க - கருத்துக் கணிப்பில் தகவல்

யோகி, மோடி

யோகி, மோடி

உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கணிக்கப்பட்டுள்ளன.

    பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு மட்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் உத்தரப் பிரதேசமாகும். 403 சட்டமன்றத் தொகுதிகளையும் 80 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம்.

    ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்திருந்தாலும் ஒட்டுமொத்த இந்தியாவும் உத்தரப் பிரதேச தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மாபெரும் வெற்றி பெற்றது. சுமார் 300 தொகுதிகளில் வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் தலைமையில் ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி நிலவியது.

    ஆளும் ஆட்சிக்கு எதிரான தீவிர எதிர்ப்புக்கு மத்தியில்தான் பா.ஜ.க தேர்தலைச் சந்தித்தது. ஆனாலும், பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கணிக்கப்பட்டுள்ளன.

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் NewsX கருத்துகணிப்பு

    பாஜக கூட்டணி - 225

    சமாஜ்வாதி கூட்டணி - 148

    காங்கிரஸ் - 6

    பகுஜன் சமாஜ்வாதி - 24

    மற்றவை - 0

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் P-MARQ கருத்துகணிப்பு

    பாஜக கூட்டணி - 240

    சமாஜ்வாதி கூட்டணி - 140

    காங்கிரஸ் - 4

    பகுஜன் சமாஜ்வாதி - 17

    மற்றவை - 2

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் POLSTRAT கருத்துகணிப்பு

    பாஜக கூட்டணி - 211 - 225

    சமாஜ்வாதி கூட்டணி - 116 - 160

    காங்கிரஸ் - 4 -6

    பகுஜன் சமாஜ்வாதி - 14 -24

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் POLLS OF POLLS கருத்துகணிப்பு

    பாஜக கூட்டணி - 238 - 258

    சமாஜ்வாதி கூட்டணி - 128 - 148

    காங்கிரஸ் - 3-7

    பகுஜன் சமாஜ்வாதி - 8 - 16

    கோவாவில் தொங்கு சட்டமன்றம்- தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

    உத்திரபிரதேசம் சட்டமன்ற தேர்தல் JAN KI BAAT கருத்துகணிப்பு

    பாஜக கூட்டணி - 222 - 260

    சமாஜ்வாதி கூட்டணி - 135 - 165

    காங்கிரஸ் - 1-3

    பகுஜன் சமாஜ்வாதி - 4 -9

    மற்றவை - 3-4
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி