அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கணித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அசாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடந்தது. அதில், கடைசி கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் மாலை இறுதிகட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர், இரவு 7 மணி முதல் தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
ஏற்கனவே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பிலும் பாஜகவே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் வியூக நிறுவனங்கள் கணித்திருந்தன.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
அசாம் மாநிலத்தில் மொத்தமாக 126 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி ஆட்சி அமைக்க 64 இடங்களை கைப்பற்ற வேண்டும். அதன்படி, பாஜக 75 முதல் 85 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே கணித்துள்ளது.
தொடர்ந்து, காங்கிரஸ் 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. மேலும், பாஜக 48 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கணித்துள்ளது.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.