Exit Poll 2021 Results: அசாமில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பா.ஜ.க - ஆஜ்தாக் கணிப்பு

Exit Poll 2021 Results: அசாமில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பா.ஜ.க - ஆஜ்தாக் கணிப்பு

பா.ஜ.க

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி 75 - 85 தொகுதிகளில் வரை வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஆஜ்தாக் - ஆக்ஸிஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுமுடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்தது. அசாமில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் உட்சபட்சமாக 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 8-ம் வாக்குப் பதிவு முடிவு பெற்றவுடன், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவரத் தொடங்கின.

    தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் அசாம் மட்டுமே. அசாமில் எதிர்கட்சி காங்கிரஸ். ஐந்து மாநிலங்களில் பா.ஜ.கவும், காங்கிரஸூம் நேரடியாக மோதிய ஒற்றை மாநிலமும் அசாம் தான். எனவே, சிறிய மாநிலமாக இருந்தாலும் இந்த மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மீது கவனம் இருந்துவருகிறது.

    அசாமில் பா.ஜ.க, அசோம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 75 - 85 தொகுதிகள் வரை பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று ஆஜ்தாக் - ஆக்ஸிஸ் செய்தி நிறுவனம் கணித்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணி 40 -50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: