கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்காதீர்கள் - மத்திய அரசு

குறிப்பிட்ட இவர்களை விடுத்து 50 சதவிகித பணியாளர்கள் பணிபுரிவதை உறுதிப்படுத்துமாறு துறை தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும் வேலைக்கு அழைக்காதீர்கள் - மத்திய அரசு
pregnancy
  • Share this:
மத்திய அரசுப் பணியாளர்களில் கர்ப்பிணிகளையும், மாற்றுத்திறனாளிகளையும், அதிக ஆபத்தான உடல்நிலைகளைக் கொண்டவர்களையும் பணியில் இணையுமாறு அழைக்கவேண்டாம் என்று அனைத்து துறை அதிகாரிகளிடம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை அடுத்து, பணியனுபவம் குறைவான 50 சதவிகித ஜூனியர் பணியாளர்களை வேலைக்கு வருமாறு சுற்றறிக்கை அளித்திருந்தது மத்திய அரசு. தற்போது அதில் கர்ப்பிணிகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், அதிக ஆபத்துடைய உடல் நிலையைக் கொண்டவர்களுக்கும் விலக்கு அளிக்குமாறு அனைத்து துறை அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பிட்ட இவர்களை விடுத்து 50 சதவிகித பணியாளர்கள் பணிபுரிவதை உறுதிப்படுத்துமாறு துறை தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.First published: May 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading