அமேசான் இந்தியா ஆன்லைன் விற்பனை நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மீது மத்தியப் பிரதேசம் பிந்த் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நவம்பர் 13-ம் தேதி இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதுமுள்ள வணிகர்கள் மத்தியப் பிரதேச காவல்துறையினர், அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் பிரதேசம் பிந்த் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘அமேசான் நிர்வாக இயக்குநர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 38- போதைப் பொருள் மருந்துகள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோஜ் சிங் விசாரணை செய்துவருகிறார். அமேசான் தளத்தின் மூலம் மாரிஜூவானா என்ற போதைப் பொருளை 20 லோடு புக் செய்யப்பட்டுள்ளது. மாரிஜூவானா புக் செய்யப்பட்டதும், அதனை யாருக்கு டெலிவரி செய்யப்பட்டது என்பது குறித்தும் முழு விவரம் இன்னும் சேகரிக்கப்படவில்லை.
கோஹத் சவுரஹா பகுதியைச் சேர்ந்த பிஜேந்திரா தோமர் மற்றும் சூரஜ் கல்லு பாவய்யா என்பவர்களிடமிருந்து 21 கிலோ மாரிஜூவானா கைப்பற்றப்பட்டுள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த முகுல் ஜெயஸ்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா பால்மிகி என்பவருக்கு மாரிஜூவானா விற்பனை செய்யப்பட்டுள்ளது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்திலிருந்து அமேசான் வாடிக்கையாளர்களுக்கு மாரிஜூவானா கொடுக்கப்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சூரஜ் கல்லு பாவய்யா அவருடைய நிறுவனத்தை ஏஎஸ்எஸ்எல் விற்பனை நிறுவனம் என்ற பெயரில் அமேசானில் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கில் விசாகப்பட்டினத்திலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அமேசான் இந்தியா நிர்வாக இயக்குநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல்துறை விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுவரையில் இந்தியா முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு கோடி மதிப்புள்ள மாரிஜூவானா விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.