Home /News /national /

Exclusive | பா.ஜ.க 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் - யோகி ஆதித்யநாத் உறுதி

Exclusive | பா.ஜ.க 300 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும் - யோகி ஆதித்யநாத் உறுதி

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

பா.ஜ.க 300 தொகுதிகளுக்கு கூடுதலாக வெற்றி பெறும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க, அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்கிறது. இன்று அவர் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

    அதன்பிறகு நியூஸ்18- தலைமை எடிட்டர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேச மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மிகப் பெரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். நான் உறுதியாக இருக்கிறேன், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க 300 தொகுதிகளுக்கும் கூடுதலாக வெற்றி பெறும். இந்த இரட்டை எஞ்சின் அரசு நிச்சயாக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். ஏனென்றால், பெண்கள், குழந்தைகள், மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களும் இந்த அரசால் பயனடைந்துள்ளனர்.

    இது 80:20 சதவீதத்துக்கு இடையே நடைபெறும் போட்டி. பா.ஜ.க 80 சதவீத இடங்களில் வெற்றி பெறும். மீதமுள்ள கட்சிகள் 20 சதவீத இடங்களில் வெற்றி பெறும். கோரக்பூருக்கு நான் புதியவன் அல்ல. பா.ஜ.க ஜனநாயகக் கட்சி. ஆனால், கட்சி தொகுதிக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பல காரணிகளைக் கவனத்தில் கொள்ளும். என்னுடைய முதல் சட்டமன்றத் தேர்தலில் என்னை கோரக்பூர் தொகுதிக்கு தேர்வு செய்தத்ற்கு நான் கட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: BJP, Election 2022, Uttar pradesh, Yogi adityanath

    அடுத்த செய்தி