முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive: உ.பி மக்கள் சாதி பிரிவினை அரசியலை நிராகரித்துள்ளனர்... முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத்

Exclusive: உ.பி மக்கள் சாதி பிரிவினை அரசியலை நிராகரித்துள்ளனர்... முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

2014இல் தொடங்கி 2022 வரை நடைபெற்ற 4 தேர்தல்களில் மக்கள் சாதி பிரிவினை அரசியலை நிராகரித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேசத்தில் முதலமமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து, யோகி ஆதித்தயநாத் மீண்டும் முதலமைச்சரானார். இந்நிலையில், மாநில வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து யோகி ஆதித்யநாத் நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்தாவது, "பிரதமர் மோடி இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற கனவு கண்டுள்ளார். அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை கொடுத்துள்ளார். எனவே இந்தியாவின் வளர்ச்சிக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது.

வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெருமளவில் முதலீடுகளை ஈட்டி புதிய வேலை வாய்ப்புகளை ஈர்க்க உள்ளோம். மாநிலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தந்துள்ளோம்" என்று தெரிவித்தார். ராம் சரித்திரமானாஸ் புத்தகம் தொடர்பாக பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சர் மாயவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த சர்ச்சை குறித்து பதிலளித்து பேசிய யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேச மக்கள் சாதிப் பிரிவினை அரசியலால் பெரும் பாதிப்புகளை அனுபவித்தவர்கள். இந்த பிரிவினை அரசியலை மக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டு தேர்தலில் நிராகரித்தார்கள். 2017 தேர்தல், 2019 தேர்தலிலும நிராகரித்தார்கள். இறுதியாக 2022 தேர்தலிலும் தக்க பதிலடியை தந்துள்ளனர். எனவே, எதிர்தரப்பினர் என்ன முயற்சி செய்தாலும் அது மக்களிடம் செல்லுபடியாகாது" என்றுள்ளார்.

First published:

Tags: Caste, Uttar pradesh, Yogi adityanath