முகப்பு /செய்தி /இந்தியா / Exclusive: அயோத்தி ராமர் கோயில் திறப்பது எப்போது? - பிரத்தியேக பேட்டியில் யோகி ஆதித்தியநாத் பதில்

Exclusive: அயோத்தி ராமர் கோயில் திறப்பது எப்போது? - பிரத்தியேக பேட்டியில் யோகி ஆதித்தியநாத் பதில்

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

குறித்த நேரத்திற்குள் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் நிறைவடைந்து மக்களுக்காக திறக்கப்படும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் நெட்வொர்க் 18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். இதில் மாநிலத்தின் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, நாட்டின் அரசியல், ராகுல் காந்தியின் யாத்திரை ஆகியவை குறித்து பேசினார். அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரிடம் 2024 ஜனவரி 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டு மக்கள் தரிசிப்பார்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு யோகி ஆதித்தியநாத் கூறியதாவது, கோயில் கட்டுமானப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறித்த நேரத்திற்குள் கோயில் கட்டுமானம் நிறைவடையும். பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் தனது கோயிலில் அமரப்போகிறார். இது நாட்டிற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகிற்கும் பெருமைக்குரிய நாளாக திகழும் என்றார்.

அத்துடன் அவர் 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலில் பாஜக இதுவரை காணாத வெற்றியை உத்தரப் பிரதேசத்தில் பெறும் என்று தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு 80 இடங்களில் 71 இடங்களை வென்றது. 2019ஆம் ஆண்டு 61 இடங்களை வென்றது. வரும் மக்களவை தேர்தலில் 2014இல் வெற்றிபெற்ற 71 இடங்களை விட கூடுதல் இடங்களை பாஜக கைப்பற்றும் என யோகி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் பேரில் உத்தரப் பிரதேச கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சிறந்த வளர்ச்சியை கண்டு வருகிறது.

இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இதில் உத்தரப் பிரதேசத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. விரைவில் உத்தரப் பிரதேசத்தை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம். நாட்டிற்கு பிரிவினைவாத அரசியலை கொடுத்தது காங்கிரஸ் தான். ராகுல் காந்த தனது எதிர்மறை அரசியலை கைவிட்டால் காங்கிரஸ் கட்சி மேம்படும் என யோகி ஆதித்தியநாத் கூறியுள்ளார்.

First published:

Tags: Ayodhya Ram Temple, Uttar pradesh, Yogi adityanath