ஹோம் /நியூஸ் /இந்தியா /

EXCLUSIVE | அத்து மீறிய சீன ராணுவத்தினரை சிறைபிடித்த இந்திய ராணுவம்: எல்லையில் அதிரடி

EXCLUSIVE | அத்து மீறிய சீன ராணுவத்தினரை சிறைபிடித்த இந்திய ராணுவம்: எல்லையில் அதிரடி

எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினரை சிறைப்பிடித்த இந்திய ராணுவம்

எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினரை சிறைப்பிடித்த இந்திய ராணுவம்

திபேத் தவாங் செக்டாரிலிருந்து அருணாச்சலப் பிரதேச எல்லைக்குள் நுழைந்த 200 சீன ராணுவத்தினரை தடுத்து நிறுத்தி தற்காலிகமாக இந்திய ராணுவம் அவர்களை சிறைப்பிடித்து வைத்தனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

எல்லைப்பகுதியில் இருந்த ஆளில்லா பங்கர்களை சேதப்படுத்த முயன்ற சீன ராணுவ வீரர்களின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்ததோடு சுமார் 200 சீன ராணுவ வீரர்களை தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்தது. ஆனால் இந்திய பாதுகாப்புப் படைக்கு எந்த வித சேதமும் ஏற்படவில்லை என்று ராணுவத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் நியூஸ் 18 சேனலுக்குத் தெரிவித்தது.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்கு அருகே பும் லா மற்றும் யாங்சே கனவாய் பகுதியில் நடந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர்களை திறம்பட தடுத்து முறியடித்த இந்திய ராணுவம் அவர்களை தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்தது.

பிறகு அந்தப் பகுதி ராணுவ கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தையில் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட்டதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரம் நியூஸ் 18 சேனலுக்குத் தெரிவித்தது. ஆனால் இது தொடர்பாக இந்திய ராணுவத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால் நியூஸ் 18 சேனலுக்கு தெரிவித்த ராணுவ வட்டாரங்கள் இந்த நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு எந்த வித சேதமும் இல்லை என்றனர்.

இந்திய-சீன எல்லை அதிகாரபூர்வமாக பிரிக்கப் படாத பகுதி என்பதால் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் இருதரப்பினரின் பார்வையில் வேறுபாடு உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்கெனவே இருக்கும் உடன்படிக்கைகள், நடைமுறைகள் அனுசரிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் அவ்வப்போது சீன அத்துமீறல்கள் தொடரவே செய்கின்றன.

எல்லையில் சீன அத்துமீறல் மற்றும் ஆக்ரோஷம் புதிதல்ல. 2016-ம் ஆண்டிலும் யாங்ஷே பகுதியில் இதே போல் 200 சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து பிறகு சென்று விட்டனர். 2011-ல் எல்லையில் இந்தியப் பகுதியில் உள்ள 250 மீ நீள சுவரில் ஏறிக்குதிக்க முயன்று சுவரை சேதப்படுத்தியது சீன ராணுவம். இதனையடுத்து இந்தியா தன் எதிர்ப்பை சீனாவிடம் பதிவு செய்தது.

இந்தியாவும் சீனாவும் விரைவில் 13ம் சுற்று கார்ப்ஸ் கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மேலும் படைகளை வாபஸ் பெற முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

தவாங் பகுதி ஏன் முக்கியம்:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் முக்கியமான உத்தி எல்லையாக இருப்பது தவாங் பகுதியே. 1962-ம் ஆண்டு போரில் முதலில் தவாங்கைத்தான் சீனா பிடித்தது. திபேத்தின் ஒரு பகுதியே தவாங் என்பது சீனாவின் துணிபு. அருணாச்சலப் பிரதேசத்தையே தெற்கு திபேத் என்கிறது சீனா. தவாங் 6ம் தலாய்லாமாவின் பிறப்பிடம். திபேத்திய பவுத்தத்தில் தவாங் ஒரு முக்கியமான இடம்.

நியூஸ் 18 சேனலுக்கு தவாங் பற்றிக்கூறிய இந்திய ராணுவ மூத்த அதிகாரி, தவாங்கிலிருந்து தகவல் தொடர்பு அமைப்புகள் குவஹாத்தி வரை நீள்கிறது என்றார். சிலிகுரி பகுதி வரை கம்யூனிகேஷன் லைன்கள் உள்ளன, அதனால்தான் தவாங் ராணுவ ரீதியாக ஒரு முக்கியமான இடமாக உள்ளது என்றார். அதே போல் தவாங்கை அருணாச்சலப் பிரதேசத்தின் பிற இடங்களுடன் இணைக்கும் போம்டில்லா, நெச்சிப்பு,  சே லா கனவாய்ப்பகுதிகள் இந்திய ராணுவத்தை நிலைநிறுத்த உதவுவதாக அவர் கூறினார்.

First published:

Tags: Arunachal Pradesh, India vs China, News On Instagram