Home /News /national /

Exclusive: உபியில் முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம்... இந்த 4 விஷயத்திற்கே மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள்: அமித் ஷா

Exclusive: உபியில் முழு பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவோம்... இந்த 4 விஷயத்திற்கே மக்கள் பாஜகவை ஆதரிப்பார்கள்: அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷா

Amit shah exclusive interview : இந்தத் தேர்தலில் பாஜக 230- 260 இடங்களைப் பெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன. 2017ல் 238 இடங்கள் என்று கணிக்கப்பட்டது, நாங்கள் 325 இடங்களை வென்றோம். இந்த தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...

    யோகி  ஆதித்யநாத் தலைமையில் உத்தர பிரதேச அரசு மக்களின் மனங்களை வென்றுள்ளதாகவும், அம்மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் பாஜக முழு பெரும்பான்மையுடன்  வெற்றிபெறும் என்றும் அமித்ஷா கூறினார்.


    403 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில், 172 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு பிப்ரவரி 23, 27 மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சி அமைத்ததில்லை. இதனை மாற்றி மீண்டும் பாஜக ஆட்சியை அமைக்க அக்கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவருமான அமித்ஷா  நெட்வொர்க் 18 குழுமத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது உத்தரப் பிரதேச தேர்தல் குறித்து பேசிய அமித்ஷா, உத்தரப் பிரதேசத்தில் மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டன, மற்றவை உள்ளன. உ.பி.யின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் ஜன் விஸ்வாஸ் யாத்ரா மற்றும் விஜய் சங்கல்ப் யாத்ராக்களை நடத்தியுள்ளேன்.

    இதையும் படிங்க: Exclusive: மோடி மீதான மக்கள் அன்பு அதிகரித்துள்ளது: அமித் ஷா


    மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்தியுள்ளேன். உத்தரபிரதேசத்தில் பாஜக முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மக்கள் மனதில் இடம்பிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என எனக்கு தெரியும்’ என்று கூறினார்.

    மேலும் படிங்க: நந்தி மலையில் சிக்கிக்கொண்ட நபர்: ஹெலிகாப்டரை அனுப்பி மீட்ட இந்திய விமானப் படை


    மேலும், ‘இந்தத் தேர்தலில் பாஜக 230- 260 இடங்களைப் பெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுகின்றன. 2017ல் 238 இடங்கள் என்று கணிக்கப்பட்டது, நாங்கள் 325 இடங்களை வென்றோம். கணிப்பு என்பதுகருத்துக்கணிப்பில் முக்கியமான  ஓர்  அம்சமாகும், ஏனெனில் மக்கள் தங்கள் நம்பகத்தன்மையை கணக்கெடுப்புகளுடன் இணைக்கிறார்கள். மேலும், கணிப்பு நடத்துபவர்களிடம்  பொதுமக்கள் சொல்வது உண்மையாக இருக்கும் என கூறமுடியாது. பல முரண்பாடுகள் உள்ளன’ என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அமித் ஷா, நான்கு பிரச்சனைகளுக்காக உபி மக்கள் பாஜகவுக்கு ஆதரவளித்து வலிமை அடைய செய்துள்ளனர்.  முதலில் சட்டம் ஒழுங்கு, இரண்டாவது  கரீப் கல்யாண் திட்டம்,  மூன்றாவது குடிநீர், மின்சாரம் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய வளர்ச்சி, நான்காவது உத்தரப் பிரதேச அரசு நிர்வாகத்தை நாங்கள் மேம்படுத்திய விதம். இதற்காகவே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்  என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Amit Shah, Amit Shah To News 18, Election 2022, Uttar pradesh

    அடுத்த செய்தி