Home /News /national /

8ம் வகுப்பு மாணவியை ஜாதியைக் கூறி திட்டி பள்ளியைவிட்டு அடித்து விரட்டிய முன்னாள் ஊர் தலைவர்.. உத்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

8ம் வகுப்பு மாணவியை ஜாதியைக் கூறி திட்டி பள்ளியைவிட்டு அடித்து விரட்டிய முன்னாள் ஊர் தலைவர்.. உத்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மானிக்பூரில் உள்ள பள்ளி

மானிக்பூரில் உள்ள பள்ளி

அந்த மாணவியை ஜாதிய வசைகள் கொண்டு கடுமையாக திட்டியுள்ளார். பின்னர்  சிறுமி என்றும் பாராமல், கடுமையாக தாக்கி, பள்ளியில் இருந்து வெளியே தள்ளிவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    உத்தரபிரதேசத்தில் 8ஆம் வகுப்பு பயிலும் தலித் மாணவி ஒருவர், சீருடை அணியாததற்காக முன்னாள் ஊர் தலைவரால் பள்ளியில் இருந்து அடித்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரபிரதேசத்திம் பதோஹி மாவட்டம் மணிக்பூர் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றிற்கு கடந்த திங்கள் கிழமையன்று அக்கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவர் மனோஜ் குமார் துபே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சீருடை அணியாமல், சாதாரண உடை அணிந்திருந்தை கண்டு, ஏன் சீருடை அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த சிறுமி, தன் தந்தை சீருடை வாங்கி தரவில்லை எனவும், வாங்கி கொடுத்தவுடன் அணிந்து வருவதாக கூறியுள்ளார்.

    இந்த பதிலை கேட்டு ஆத்திரமடைந்த அவர், அந்த மாணவியை ஜாதிய வசைகள் கொண்டு கடுமையாக திட்டியுள்ளார். பின்னர்  சிறுமி என்றும் பாராமல், கடுமையாக தாக்கி, பள்ளியில் இருந்து வெளியே தள்ளிவிட்டார். இந்நிலையில் முன்னாள் ஊர் தலைவர் எதற்காக பள்ளிக்கு சென்று பார்வையிட்டார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

    மேலும் படிக்க: பிரதமர் மோடி திறந்து வைத்த ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

    இதனை அறிந்த, அந்த சிறுமியின் உறவினர்கள் காவல்நிலைத்தில் புகார் அளித்ததை அடுத்து, துபே மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து துபே தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் பெற்றோர் பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Uttar pradesh

    அடுத்த செய்தி