முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..

அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவில் கொள்ளப்படுவார் என புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் மோடி.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் காலமானார்..
ஜஸ்வந்த் சிங்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 9:33 AM IST
  • Share this:
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த ஜஸ்வந்த் சிங், வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்காலத்தில் நிதி, வெளியுறவு, பாதுகாப்புத்துறை பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

மறைந்த ஜஸ்வந்த் சிங், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்பதும் 2001-இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை பெற்றவர் என்பது  குறிப்பிடத்தக்கது.



ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாஜகவை வலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங் என புகழாரம் சூட்டிய மோடி, நாட்டைக் காக்கும் வீரராக, அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவில் கொள்ளப்படுவார் என தெரிவித்துள்ளார்.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading