பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் முகமாக இருந்து வந்தவர் கேப்டன் அமரிந்தர் சிங், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நண்பரான அமரிந்தர் சிங் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். நவ்ஜோத் சிங் சித்துவுடனான மனக்கசப்பினால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரிந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகினார்.
காங்கிரஸில் இருந்து விலகிய கேப்டன் அமரிந்தர் சிங், பாஜகவில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை தோற்றுவித்தார். ஆனால் இக்கட்சியை பாஜகவின் கூட்டணியில் அமரிந்தர் இணைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Also read:
சித்தார்த்தா மறைவுக்கு பிறகு காபி டே நிறுவனம் உயிர்த்தெழ காரணமான ‘நிஜ சிங்கப் பெண்’ மாளவிகா
எதிர்வரும் பிப்ரவரி 14ம் தேதியன்று 117 தொகுதிகளை உள்ளடக்கிய பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமரிந்தர் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அமரிந்தர் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், என்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்தவர்களும் உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Also read:
அந்தரங்க உறுப்பில் கடித்து வயதான கணவர் செக்ஸ் கொடுமை - இளம் மனைவி பரபரப்பு புகார்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் மனைவியும், காங்கிரஸ் எம்.பியுமான பிரனீத் கவுருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் அரசை வீழ்த்துவதில் குறியாக இருந்து வருகிறார் அமரிந்தர் சிங். அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்புகளின்படி பஞ்சாப் மாநிலத்தில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது எனவும் அதே நேரத்தில் தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்கும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
Also read:
43வயது மெக்கானிக்கை கொலை செய்து ஆண் உறுப்பை வெட்டி சாப்பிட்ட ஆசிரியர்
வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கூடும், ஆனால் பாஜக கூட்டணியின் பலமாக இருந்து வருபவர் கேப்டன் அமரிந்தர் சிங் தான். அம்மாநிலத்தில் அமரிந்தருக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. ஆனால் கேப்டன் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பாஜக கூட்டணிக்கு பஞ்சாபில் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.