Home /News /national /

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் - எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

Manmohan singh

Manmohan singh

மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த புதன்கிழமை மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கார்டியோ-நியூரோ மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவரது உடலில் ரத்த தட்டுகள் (blood platelets) எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதகாவும் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று குணமடைந்தார். ஏற்கனவே அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான பரிசோதனையும் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

Also read:   11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கிய இரு பெரும் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள்!

முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வியாழக்கிழமை அன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று மன்மோகன் சிங்கின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மன்மோகன் சிங்கை நலம் விசாரித்தது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.

மன்மோகன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை குலைக்கும் வகையில் இந்தபுகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சிமற்றும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த புகைப்படங்களை அவர் நீக்கினார்.

 

 
Published by:Arun
First published:

Tags: AIIMS, Congress, Manmohan singh

அடுத்த செய்தி