• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

வழிப்பறியில் ஈடுபட்டு வந்த முன்னாள் தேசிய சாம்பியன் கைது!

taekwondo

taekwondo

வழிப்பறி கொள்ளையனாக திகழ்ந்த சுராஜ், ‘டேக்வாண்டோ’ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவர்

  • Share this:
‘இந்தியன் ஐடால்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, விளையாட்டு போட்டிகளில் இரு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற பிரபல விளையாட்டு வீரர், தொழில்முறை திருடனாக 100க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த புதன்கிழமையன்று, டெல்லின் மோதி நகர் பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது. ஸ்கூட்டரில் வந்த ஒரு இளைஞர் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்ததால், அவரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த ஸ்கூட்டர் கீர்த்தி நகர் பகுதியில் திருடப்பட்டது என தெரியவந்ததையடுத்து அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அந்த நபர் உத்தம் நகர் பகுதிவாசி எனவும், அவருடைய பெயர் ‘ஃபைட்டர்’ என அழைக்கப்படும் சுராஜ் எனவும் தெரியவந்தது. இவர் சம்சி மண்டி பகுதியில் ஏராளமானவர்களிடம் மொபைல் போன்களையும், தங்க நகைகள் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது, மேலும் இவர் வழிப்பறி செய்த நகைகள் மட்டும் 2.5 கிலோ அளவுக்கு இருக்கும் என பின்னர் தெரியவந்தது.

சாதாரண வாகன சோதனையில் வழிப்பறி கொள்ளையன் சிக்கிக்கொண்டான் என கருதிய காவல்துறையினருக்கு பின்னர் தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

Also Read:  ஜெர்மனியில் முதல்முறையாக 3 கட்சி இணைந்து ஆட்சி.. பதவி விலகும் ஏஞ்சலா மெர்கல்!

வழிப்பறி கொள்ளையனாக திகழ்ந்த சுராஜ், ‘டேக்வாண்டோ’ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ந்தனர். 28 வயதே ஆகும் சுராஜ் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. இதுதவிர பிரபல இந்தியன் ஐடால் சீசன்-4 நிகழ்ச்சியில் 2008ம் ஆண்டு கலந்துகொண்டு டாப் 50 போட்டியாளர்களில் ஒருவராக வந்திருக்கிறார்.

சுராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி குண்டுகளும், கத்திகள், 55 திருடப்பட்ட மொபைல் போன்களும், 5 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுராஜ் தனது கூட்டளிகளுடன் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: