வேறு பெண்ணுடன் திருமணம்: காதலன் மீது ஆசிட் ஊற்றிய முன்னாள் காதலி

கை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த நாகேந்திராவை நந்தியாலா மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் சுப்ரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு பெண்ணுடன் திருமணம்: காதலன் மீது ஆசிட் ஊற்றிய முன்னாள் காதலி
ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்
  • Share this:
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியாலா மண்டலம், பெத்த பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகேந்திராவும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரியாவும் கடந்த மூன்று வருடமாக காதலித்து வந்தனர்.

நாகேந்திரா அப்பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் வேலை செய்யும் நிலையில் சுப்ரியா பிளஸ் டூ முடித்து வீட்டில் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.இவர்களது காதலுக்கு இரு வீட்டினரும் ஒப்புக்கொள்ளாத நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நாகேந்திராவுக்கு அவர்களின் பெற்றோர்கள் லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்தனர். இதனால் கோபமடைந்த முன்னாள் காதலி சுப்ரியா நாகேந்திர மீது நேற்று அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் ஆசிட் ஊற்றினார்.

மேலும் படிக்க: குடியாத்தம்: பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி..

கை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த நாகேந்திராவை நந்தியாலா மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து வந்த போலீசார் சுப்ரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading