மனைவியை வெளியே தள்ளிவிட்டு 2 வயது மகளை நாசம் செய்த கொடூர தந்தை!

rape

அறைக்குள் சென்று பார்த்த போது குழந்தை அழுதுகொண்டே தரையில் படுத்திருந்த நிலையில் அவளின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறது.

  • Share this:
மனைவியை வெளியே தள்ளிவிட்டு கதவை அடைத்துக் கொண்டு, தான் பெற்ற 2 வயது மகளையே தந்தை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பீகாரைச் சேர்ந்த வீட்டு வேலை பார்த்து வரும் பெண், தனது கணவருடனும் புதிதாக பிறந்த பெண் குழந்தையுடன், டெல்லி அருகேயுள்ள குருகிராமுக்கு குடிபெயர்ந்தார். தம்பதியர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், கணவரிடமிருந்து பிரிந்த அப்பெண், வேறு ஒரு நபரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டு, தனது 2 வயது மகளுடன் தனிக்குடித்தனம் சென்றார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று, அப்பெண்ணின் புதிய கணவர் வெளியே சென்றிருந்த நிலையில் தாயும், மகளும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த அப்பெண்ணின் முன்னாள் கணவர், தனது முன்னாள் மனைவியை ரூமை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். கதவை திறக்குமாறு தொடர்ந்து அப்பெண் தட்டிக்கொண்டே இருந்த போதும் அவர் திறக்கவில்லை.

இதன் பின்னர் சிறிது நேரம் கழித்து கதவைத்திறந்து வெளியே வந்த முன்னாள் கணவர், இது குறித்து யாரிடமும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். பின்னர் அறைக்குள் சென்று பார்த்த போது குழந்தை அழுதுகொண்டே தரையில் படுத்திருந்த நிலையில் அவளின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்திருக்கிறது.

Also Read: எங்கிட்ட சொல்லாம பானிபூரி வாங்கலாமா? – மனைவி செய்த பகீர் சம்பவம்!

இந்த சம்பவம் குறித்து தனது கணவரிடமும், அருகே இருந்த உறவினர் ஒருவரிடமும் அப்பெண் கூறியுள்ளார். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கின்றனர். இதன் பின்னரே இச்சம்பவம் வெளியுலகுக்கு தெரியவந்தது.

அந்த நபர் மீது போஸ்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தந்தையே தனது இரண்டு வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: