Home /News /national /

முன்னாள் துணை மேயரின் மருமகள் குழந்தை கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளி

முன்னாள் துணை மேயரின் மருமகள் குழந்தை கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளி

Child Trafficking

Child Trafficking

இந்த வழக்கில் துணை மேயருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பல ஆண்டுகளாக குழந்தை கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் காவல்துறையினர் வசம் சிக்கிய நிலையில் முன்னாள் துணை மேயரின் மருமகள் அந்த கும்பலின் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்தது அம்பலமாகி இருக்கிறது.

கொல்கத்தாவின் ஹவுரா அருகே சல்கியா எனும் பகுதியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகம் ஒன்றில் இருந்து கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் 9 வயது சிறுமியை தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் தனது வளர்ப்பு பெற்றோரிடம் தத்தெடுக்கப்பட்ட சிறுமி, தான் வளர்ந்து வந்த குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொந்தரவை சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன தம்பதியர் இது குறித்து ஹவுரா மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சிறப்பு புலனாய்வு குழுக்கள், குழந்தைகள் நலத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். கடந்த வெள்ளியன்று இரவு சம்பந்தப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் அதிரடி ரெய்டும் நடத்தினர். அப்போது காப்பகத்தில் இருக்க வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கைக்கும், அங்கிருந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருக்க வேண்டிய எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக குழந்தைகள் இருந்துள்ளனர். இது குறித்து குழந்தைகள் காப்பக நிர்வாகி கீதாஸ்ரீயிடம் விசாரித்த போது அவர் மழுப்பலாக பதிலளித்தார். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அங்கிருந்த குழந்தைகள் கடத்திவரப்பட்ட குழந்தைகள் என தெரியவந்தது. உடனடியாக நிர்வாகி கீதாஸ்ரீ கைது செய்யப்பட்டார்.

Also read:  பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை - டெல்லி முதல்வர் அறிவிப்பு

அங்கிருந்த காப்பக ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். அந்த காப்பகத்தில் இருந்த 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அருகில் இருப்பவர்களிடம் விசாரித்த போது இந்த காப்பகத்தில் எல்லாமே மர்மம் தான். அவ்வப்போது வெளிநாட்டினர் வருவார்கள். யாருமே அங்கு எளிதில் சென்றுவிடமுடியாது. சில அரசியல் பிரமுகர்களும் வந்து போகிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதான கீதாஸ்ரீ திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரும் ஹவுரா முன்னாள் பெண் துணை மேயர் மினாட்டி அதிகாரியின் மருமகள் ஆவார். இந்த வழக்கில் துணை மேயருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 
Published by:Arun
First published:

Tags: Child Trafficking, POCSO case

அடுத்த செய்தி