• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மேகாலயாவில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்கிரஸ்.. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சிதாவல்

மேகாலயாவில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்கிரஸ்.. எம்.எல்.ஏக்கள் கூண்டோடு கட்சிதாவல்

Congress

Congress

காங்கிரஸ் கட்சி மேகாலாயா மாநிலத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிடாத திரிணாமுல் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை பெற உள்ளது.

  • Share this:
மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களில், முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 12 பேர் காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

மேகாலயா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முகுல் சங்மா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி 17 இடங்களை வென்றது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 21 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்த போதிலும் கூட அக்கட்சியால் ஆட்சி அமைக்க இயலாமல் போனது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா அங்கு முதல்வராக இருந்து வருகிறார். அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சியை பறிகொடுத்ததால், காங்கிரஸ் கட்சியின் முகுல் சங்கா சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வின்செண்ட் ஹெச். பாலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. வின்செண்ட் நியமனத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. இதையடுத்து எதிர்கட்சித் தலைவர் முகுல் சங்மா இது குறித்து பல முறை டெல்லி சென்று சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் இந்த பேச்சுவார்த்தைக்கு பலன் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே சமீபத்தில் முகுல் சங்மா பிரசாந்த் கிஷோரை நேரில் சந்தித்து பேசினார்.

Also read:   Netflix வெப்சீரிஸ் தொடர் பார்த்த வடகொரிய மாணவருக்கு ஆயுள் தண்டனை; ஒருவருக்கு மரண தண்டனை

இதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில் ஷில்லாங்கில், முன்னாள் முதல்வரும் இந்நாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான முகுல் சங்மா தலைமையிலான 12 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேகாலாயா மாநிலத்தில் எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிடாத திரிணாமுல் காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை பெற உள்ளது.

7வது காங்கிரஸ் முன்னாள் முதல்வர்:

முகுல் சங்மா விலகலுடன் சேர்த்து 2014ஆம் ஆண்டுக்கு பின்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 7 முன்னாள் முதல்வர்கள் அக்கட்சியில் இருந்து விலகியிருக்கிறார்கள். முன்னதாக அமரீந்தர் சிங், விஜய் பகுகுனா,  அஜித் ஜோஹி, எஸ்.எம்.கிருஷ்ணா,  நாராயன் ரானே, கிரிதர் கமாங் போன்றோரும் காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது

Also read:  குழந்தையின் உயிர்காக்க விஞ்ஞானியாக மாறிய தந்தை.. பள்ளிப்படிப்பை தாண்டாதவர் வீட்டிலேயே மருந்து தயாரித்து அசத்தல்..

மேகாலயா மாநிலத்தில் வரும் 2023ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 12 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் முகுல் சங்மாவின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அதே நேரத்தில் மேற்குவங்க தேர்தல் வெற்றிக்கு பின்னதாக பாஜகவுக்கு எதிரான முக்கிய தேசிய கட்சியாக திரிணாமுல் காங்கிரஸை நிலை நிறுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: