• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் தற்கொலை.. சடங்குகள் கூடாது என இறுதிக் கடிதம்..

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் தற்கொலை.. சடங்குகள் கூடாது என இறுதிக் கடிதம்..

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார்

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமார்

சிபிஐ முன்னாள் இயக்குநர் அஷ்வனி குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  • Share this:
    இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஷ்வனி குமார் 2008 முதல் 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக பதவி வகித்தார். 2013-14 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டுள்ள இவர், குடும்பத்துடன் சிம்லாவில் வசித்து வந்தார். இந்நிலையில், அஸ்வனி குமார் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் எழுதியுள்ள கடிதத்தில், தனது ஆத்மா புதிய பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும், தனது உடலுக்கு எந்த சடங்குகளும் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ இயக்குநராக அஸ்வனி குமார் இருந்த காலகட்டத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், சொராபுதீன் என்கவுன்டர் போன்ற முக்கிய வழக்குகளை கையாண்டார்.

    மேலும் படிக்க.. டப்பாவாலாக்களுக்கு சிறப்பு அனுமதி - மும்பையில் ரயில்வே அறிவிப்பு



    சொராபுதீன் வழக்கில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா கைது செய்யப்பட்ட போதும் சிபிஐ இயக்குநராக அஷ்வனி குமார் பதவி வகித்து வந்தார். அதன்பின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், பதவியை விட்டு விலக நேரிட்டது.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: