மாணவியிடம் தவறாக பேசியதாகக் கூறி, பாஜக முன்னாள் எம்.எல்.ஏவை அடித்து உதைத்த குடும்பத்தினர்.. நடந்தது என்ன?

மாயா ஷங்கர் பதக், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ

செளபேபூர் காவல்துறையினர் பதக்கை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் பதக் தரப்பு, இது தொடர்பாக தான் எந்த வழக்கையும் பதிவு செய்ய விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
வாரணாசியில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, செளபேபூரில் அமைந்துள்ள பலுவா பஹாடியா மர்க் என்னும் பகுதியில் தனியார் கல்லூரியின் முதல்வராகவும் இருக்கும் மாயா ஷங்கர் பதக். வாரணாசி தொகுதியின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ வான இவர் இரு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

70 வயதான மாயா ஷங்கர் பதக், தனது கல்லூரியில் படிக்கும் மாணவி குறித்து பாலியல் ரீதியாக பேசியும், தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் கூறியதால், 10-க்கும் மேற்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினரும் இன்னும் சில நபர்களும் கல்லூரிக்கு வந்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பதக்கிடம் விசாரித்துள்ளனர். குடியரசு தின விழா பேச்சுப்போட்டி ஒத்திகையில் சரியாக பேசவில்லை எனக் காரணம் கூறிய பதக்கை, குடும்ப உறுப்பினர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். இறுதியில் பதக் கையெடுத்துக் கும்பிட்டும், காதைப் பிடித்தும், பெண் குடும்பத்தினரிடம்  மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் செளபேபூர் காவல்துறையினர் பதக்கை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் பதக் தரப்பு, இது தொடர்பாக தான் எந்த வழக்கையும் பதிவு செய்ய விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதக்கை தாக்கிய மாணவியின் குடும்பத்தினரும், அவர் மீது புகார் அளிக்க மறுத்திருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
Published by:Gunavathy
First published: