முகப்பு /செய்தி /இந்தியா / பசு மாட்டிற்காக 5 பேரை அடித்துக்கொன்றோம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

பசு மாட்டிற்காக 5 பேரை அடித்துக்கொன்றோம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏ

சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏ

சர்ச்சை பேச்சு தொடர்பாக பாஜக முன்னாள் எம்எல்ஏ அஹுஜா மீது காவல்துறை 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • Last Updated :
  • Rajasthan, India

பசுவிற்காக ஐந்து பேரை அடித்துக்கொன்றோம் என பாஜக முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2012-2017 வரை வசுந்தர ராஜேவின் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வீழ்த்தி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

பாஜக ஆட்சி புரிந்த காலத்தில் அம்மாநிலத்தில் சில பகுதிகளில் பசு மாட்டை கடத்தியதாகக் கூறி சிலர் மீது வலதுசாரி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  ராஜஸ்தான் போலவே வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா இந்த விவகாரம் குறித்து பேசி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் 45 வயதான சிரஞ்சிலால் சைனி என்ற நபர் சில நாள்களுக்கு முன்னர் குறிப்பிட்ட சமூகத்தினரால் அடித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, "பசு கடத்தல், பசுவை இறைச்சிக்காக கொல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை நாம் சும்மா விடக்கூடாது.

இந்த செயல்களில் ஈடுபட்ட ஐந்து பேரை இதுவரை அடித்துக் கொன்றுள்ளோம். முதல்முறையாக நமது ஆளை அவர்கள் அடித்துக் கொன்றுள்ளார்கள். எனவே, நமது தொண்டர்களுக்கு முழு சுதந்திரத்தை நான் தருகிறேன். அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அவர்களை சிறையில் இருந்து பெயில் எடுத்து காப்பாற்ற நான் ஏற்பாடு செய்கிறேன்" என பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்

top videos

    அஹுஜா பேசிய வீடியோவை ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாஜக எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக அஹுஜா மீது காவல்துறை 153ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

    First published:

    Tags: BJP MLA, Rajasthan, Video gets viral