Home /News /national /

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பேச்சு: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கடிதம்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பேச்சு: குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கடிதம்

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

இந்த மாநாட்டில் இந்துத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தலாம் என்று நேரிடையாகவே சொல்லப்பட்டதாகவும் வெறுப்பு பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹரித்துவாரில் நடைபெற்ற மத மாநாட்டில் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசப்பட்ட சம்பவம் தொடர்பாக ராணுவத்தின் ஓய்வுபெற்ற தலைவர்கள் உட்பட நூற்ற்குக்கும் மேற்பட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    உத்தரப்பிரதேசத்தின் ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்திற்கு மாறி  ஜிதேந்திரநாராயன் தியாகி என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.ஹரித்துவாரில் நடைபெற்ற  மாநாட்டில் ஜிதேந்திரநாராயன் தியாகி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். அப்போது முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில்பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த பேச்சுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். வன்முறையை தூண்டும் விதமாக பேசப்பட்ட  சம்பவம் தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து  வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜிதேந்திர நாராயண் தியாகி மற்றும் சாத்வி அன்னபூர்ணா ஆகியோர் நேரில் ஆஜராக  நோட்டீஸ் அனுப்பினர்.

    இந்நிலையில், முன்னாள் கடற்படைத் தலைவர்களான அட்மிரல் (ஓய்வு) எல் ராம்தாஸ், அட்மிரல் (ஓய்வு) விஷ்ணு பகவத், அட்மிரல் (ஓய்வு) அருண் பிரகாஷ் மற்றும் அட்மிரல் (ஓய்வு) ஆர்.கே.தோவன் உள்பட ராணுவ படைகளின் முன்னாள் தலைவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இதையும் படிங்க: புத்தாண்டு வழிபாடு: கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்!


    அதில், இத்தகைய பேச்சு உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தலை உருவாக்குவது மட்டுமல்லாமல் வெளிநாட்டு சக்திகளுக்கு ஊக்கமளிக்கும். நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒன்று அல்லது மற்ற சமூகத்திற்கு எதிரான வன்முறைக்கான இத்தகைய அப்பட்டமான அழைப்புகளை அனுமதிப்பதன் மூலம்மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs) மற்றும் காவல்துறைப் படைகள் உட்பட சீருடையில் இருக்கும் நமது ஆண்கள் மற்றும் பெண்களின் ஒற்றுமை கடுமையாக பாதிக்கப்படும்.


    டிசம்பர் 17-19, 2021 க்கு இடையில் ஹரித்வாரில் நடைபெற்ற இந்து சாதுக்கள் மற்றும் பிற தலைவர்களின் தர்ம சன்சத் எனப்படும் 3 நாள் மத மாநாட்டின் போது நிகழ்த்தப்பட்ட உரைகளின் உள்ளடக்கத்தால் நாங்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ள அவர்கள், இந்த மாநாட்டில் இந்துத்துவத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தலாம் என்று நேரிடையாகவே சொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிரானது. இதை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 




    Published by:Murugesh M
    First published:

    Tags: Police, Religion

    அடுத்த செய்தி