ஆந்திர அரசியலில் திடீர் அதிர்ச்சி... முன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை

சிவபிரசாத்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கோடல சிவபிரசாத் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  ஆந்திராவில் கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் கோடல சிவ பிரசாத். என்.டி. ராமாராவ் தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.

  இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் சிவபிரசாத் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் வெளிவரவில்லை

  சட்டமன்றத்தில் இருந்த பொருட்களை சிவபிரசார் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக அவர் மீது சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  Published by:Sankar
  First published: