ஹோம் /நியூஸ் /இந்தியா /

'எனக்கு சீட் வேணும்'.. டவர் மீது ஏறி ரகளை செய்த ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர்.!

'எனக்கு சீட் வேணும்'.. டவர் மீது ஏறி ரகளை செய்த ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர்.!

ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர்

ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் அவரை சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு சீட் கொடுக்க வேண்டும் என கூறி முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  டெல்லி மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது.

  இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் 250 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதற்கட்டமாக 134 வேட்பாளர்களை கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டார்.

  தொடர்ந்து மறுநாள் 117 வேட்பாளர்களை கொண்ட 2வது பட்டியலை வெளியிட்டார்

  இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் டெல்லியின் முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப் உல் ஹசன் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.

  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினரும், போலீசாரும் அவரை சமாதானம் செய்து கீழே அழைத்து வந்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Aam Aadmi Party, Delhi, Suicide attempt