ஹோம் /நியூஸ் /இந்தியா /

"சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது''.. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிபதி ரவீந்திர பட் சொன்னது என்ன?

"சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது''.. 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிபதி ரவீந்திர பட் சொன்னது என்ன?

ரவீந்திர பாத்

ரவீந்திர பாத்

3 பேர் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர். நீதிபதி ரவீந்திர பட் இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

10% இடஒதுக்கீடு சமூகநீதியின் அடிநாதத்தை சிறுமைபடுத்தி உள்ளது என தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளில் ஒருவரான ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019-ம் ஆண்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்து, 103-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவந்தது. ஆனால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும்முறை அரசியலமைப்பில் இல்லை என்று கூறி யூத் ஃபார் ஈகுவாலிட்டி என்ற அமைப்பு, அரசியல் கட்சிகள், தனிநபர்கள் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி உள்ளிட்ட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் 4 விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. 3 பேர் 10% இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவித்தனர். நீதிபதி ரவீந்திர பட் இந்த இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கு தலைமை நீதிபதி யு.யு.லலித் ஆதரவு தெரிவித்தார்.

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தீர்ப்பு:

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு அடிப்படை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.

நீதிபதி பெலா திரிவேதி:

பொதுப்பிரிவில் பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு செல்லும். அது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

நீதிபதி எஸ்.பி.பர்திவாலா:

இடஒதுக்கீடு நீண்ட நாட்கள் நீடிக்க கூடாது, அது ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதாயம் அளிக்க கூடியதாக மாறிவிடும். எனவே இந்த 10% இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் அமைப்பு சட்ட திருத்ததை வரவேற்கிறேன்.

நீதிபதி ரவீந்திர பட் தீர்ப்பு:

நம் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள். அவர்கள் இந்த இடஒதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பாகுபாட்டிற்கு இடமில்லை. உயர்ஜாதிகளுக்கான 10% இடஒதுக்கீடு சமூகநீதியின் அடிநாதத்தை சிறுமைபடுத்தி உள்ளது.
இந்த இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் புறக்கணிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானது.
இடஒதுக்கீடை சலுகையாக கருதக்கூடாது. அது சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீடு.
பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களை புறக்கணிப்பதன் மூலம் இந்த சட்ட திருத்தம் ஏற்றத்தாழ்வுகளை கடைபிடிக்கிறது.
இந்த இடஒதுக்கீடு சமத்துவத்தின் ஆணி வேரை அசைத்து பார்த்துள்ளது.
50% உச்சவரம்பை மீறியுள்ளதையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடும் அப்போது சட்டத்திற்கு எதிரானதாக கருதப்பட்டது. அந்த வழக்கில் கேட்கப்பட்ட கேள்விகள் இதற்கு பொருந்தும்.
பொருளாதார இடஒதுக்கீடு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் அதில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை சேர்க்காது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Reservation, Supreme court