#Cheer4india : மன் கி பாத் உரையில் சென்னை வீராங்கனை பவானியை நினைவுக்கூர்ந்த பிரதமர் மோடி

மோடி

டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாடு வீரர்கள் ஒவ்வொருவரும் போராடி வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை. தேசத்திற்காக செல்கிறார்கள்.

  • Share this:
    மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். டோக்கியோ செல்லவிருக்கும் வீரர்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.

    நாட்டி மக்களுக்கான பிரதமர் உரையில், ‘திறமை, அர்ப்பணிப்பு, மனவுறுதி மற்றும் போட்டி நேர்மைப் பண்பு எல்லாம் ஒருசேர இணையும் போது, ஒரு சாம்பியன் உருவாகிறார். நம்முடைய தேசத்தில் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், சின்னச்சின்ன நகரங்கள், கிரமங்களில் இருந்து உருவாகிறார்கள். டோக்கியோ செல்லவிருக்கும் நமது ஒலிம்பிக் அணியிலும் கூட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை நமக்கு ஊக்கம் அளிக்கவல்லதாய் இருக்கிறது.

    Also Read: மன் கி பாத் : தடகள ஜாம்பவான் மில்கா சிங்கை மறக்க முடியுமா - நினைவுகளை பகிர்ந்துக்கொண்ட பிரதமர் மோடி

    சென்னையில் வசிக்கும் பவானி, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் முதல் இந்திய வாட்சிலம்புக்காரர். பவானி தனது பயிற்சியை தொடர வேண்டும் என்பதற்காக இவரது அன்னை தனது நகைகளைக் கூட அடகு வைத்தார் என்பதை நான் ஒருமுறை எங்கோ படிக்க நேர்ந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வில்வித்தை வீரரான பிரவீன் ஜாதவ் மகாராஷ்ட்ராவை சேர்ந்தவர். வில்வித்தையில் அற்புதமான வீரர். இவருடைய பெற்றோர்கள் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர். பெண்கள் ஹாக்கி அணியை சேர்ந்த நேஹா கோயலின் தாயும், சகோதரிகளும் சைக்கில் தொழிற்சாலையில் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வில்வித்தை வீராங்கணை தீபிகா குமாரி வாழ்க்கை பயணம் மேடு பள்ளம் நிறைந்தது. அவரது தந்தை ரிக்‌ஷா ஓட்டுகிறார். தாய் செவிலியர்.

    Also Read: MSDhoni : என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா? -விமர்சனத்துக்குள்ளான தோனியின் புகைப்படம்

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரியங்கா. பனாரஸை சேர்ந்த ஷிவ்பால் சிங் இப்படி கணக்கேயில்லாத பெயர்கள் மனதின் குரலில் என்னால் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட முடிந்தது. டோக்கியோ செல்லவிருக்கும் நமது விளையாடு வீரர்கள் ஒவ்வொருவரும் போராடி வந்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்காக மட்டும் செல்லவில்லை. தேசத்திற்காக செல்கிறார்கள். நாம் திறந்த மனதோடு அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும். விளையாட்டு வீரரின் உற்சாகத்தை அதிகரிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் #Cheer4india வோடு நமது விளையாட்டு வீரர்களுக்கு நல்வாழ்த்துக்களை அளிக்கலாம்.” என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: